கோவை மாவட்டம் பேரூர் வட்டம் தொண்டாமுத்தூர் பேரூராட்சி சங்கமம் கலைக் குழு வின் தமிழர் பாரம்பரியக் கலையான ஒயிலாட்டம் மற்றும் 55 வது அரங்கேற்ற விழா கெம்பனூர் அருள்மிகு விநாயகர் திருக்கோவில் திடலில் மிகவும் பிரம்மாண்டமாக சங்கமம் கலைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ப.கனகராஜ் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக சாந்தலிங்க மருதாசல அடிகளார், குமரகுருபர சுவாமிகள்,மயில்சாமி, தமிழ் திரைபட நடிகரும் தயாரிப்பாளருமான ரஞ்சித் ஆகியோர் கலந்துகொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் கெம்பனூர் ஊர் பெண்கள் குழந்தைகள் உட்பட 55க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மேலும் இதுவரையில் மொத்தம் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்ற விழாவில் கலந்து கொண்ட 3000-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்களை ஒன்று திரட்டி மாபெரும் அரங்கேற்ற விழா நடத்தும் திட்டம் உள்ளது.சங்கமம் கலைக்குழுவின் ஒயிலாட்டம் அரங்கேற்றத்தை கெம்பனூர் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் கண்டுரசித்தனர்.