எங்கள் தலைவர். எங்கள் கட்சி. எங்கள் கொடி. எங்கள் கொள்கை.
என்னும் தலைப்பில் இல்லம் தோறும். திமுக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருத்தணி மேற்கு ஓன்றிய செயலாளர் என். கிருஷ்ணன் தலைமையில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளில் திருத்தணி மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கோதண்டம் முன்னிலை வகித்தார். திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினருமான எஸ். சந்திரன் கலந்து கொண்டு திமுக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். கிருஷ்ண சமுத்திரம். சிறுகுமி..இ.என். கண்டிகை கூட்டுச்சாலை. தலயார் தாங்கல். கோரமங்களம். அகூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த இல்லம் தேடி கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர்கள் டில்லி பாபு.கே. அன்பு மற்றும் கவுன்சிலர் நீலா கோவிந்தசாமி. ஊராட்சி மன்ற தலைவர்கள் புச்சி ரெட்டி பள்ளி வளர்மதி குமார். கோரமங்கலம் எஸ் நரசிம்மராஜ். ஒன்றியஅவைத் தலைவர் அகூர் மாணிக்கம்.. மத்தூர் பன்னீர்செல்வம். உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்..