கோவை மாவட்டம் சூலூர் வட்டம் மோப்பிரிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட சோளக்காட்டு பாளையம் கிராமத்தில் உள்ள ஆதிவிநாயகர்கோவில் அருகில் சங்கமம் கலைக்குழுவின் ஒயிலாட்ட அரங்கேற்ற விழா சங்கமம் கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் ப.கனகராஜ் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக சங்கமம் கலைக்குழுவின் கவுரவ ஆலோசகர் மயில்சாமி மோப்பிரிபாளையம் பேரூராட்சியின் தலைவர் சசிகுமார் ஆகியோர் கலந்துகொண்டு ஒயிலாட்டக் கலைஞர்கள் ஆடிய நடனத்தை சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக கண்டு ரசித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடன கலைஞர்களுடன் புகைப்படம் எடுத்தும் பரிசுகள் வழங்கியும் நிகழ்ச்சியை சிறப்பித்தனர் இந்நிகழ்ச்சியில் தொழில்நுட்பக் குழு மற்றும் இசை கலைஞர்கள்,துணைப் பயிற்சியாளர்கள் உட்பட சோளக்காட்டு பாளையம் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்