தென்காசி வியாபாரிகள் நல சங்கத்தின் 6-ம் ஆண்டு விழா, மற்றும் பொதுக்குழு கூட்டம் மேலகரம் சமுதாய நலக் கூடத்தில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வியாபாரிகள் நலச்சங்க தலைவர் பரமசிவன் தலைமை வகித்தார். செயலாளர் அருணாசலம், ஒருங்கிணைப்பாளர் சுப்புராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சந்திரமதி ராஜா வரவேற்புரை ஆற்றினார். பொருளாளர் முகைதீன் ஆண்டறிக்கை வாசித்தார். இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா, தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவருமான எஸ். பழனி நாடார், நகர்மன்ற தலைவர் சாதிர், திருநெல்வேலி மாவட்ட வர்த்தக கழக தலைவர் ஆர் கே காளிதாசன், ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். தென்காசி மாவட்ட பேரமைப்பு தலைவர் வைகுண்ட ராஜா, கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் ராஜன், தென்காசி மாவட்ட பேரமைப்பு கணேசன், பொருளாளர் கலைவாணன், காமராஜர் தினசரி மார்க்கெட் செயலாளர் நாராயண சிங்கம், பாலசுப்பிரமணியன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தென்காசி நகர பகுதியில் சாலைகளை சீர் செய்து பொது இடங்களில் ஈ கழிவறை மற்றும் குப்பைகளை போடுவதற்கு சில்வர் தொட்டியை நகர் முழுவதும் பயன்பாட்டிற்கு வைத்த தென்காசி நகராட்சி மற்றும் நகர் மன்ற தலைவருக்கு பாராட்டு தெரிவித்தல், நகரில் சுற்றி தெரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படுகிறது எனவே கால்நடைகளை நகரின் வெளிப்புறத்தில் பராமரிக்க உரிமையாளர்களை அறிவுறுத்த தென்காசி நகராட்சியை கேட்டுக் கொள்வது, வாறுகாலை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்து கொசு உற்பத்தியை தடுக்க மருந்து அடிக்க நகராட்சியை சங்கம் கேட்டுக் கொள்வது, தென்காசி நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ஆசாத் நகர் முதல் இலஞ்சி வரையுள்ள புறவழி சாலை பணியை விரைந்து முடிக்க நெடுஞ்சாலை துறையை கேட்டுக் கொள்வது, தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு தேவையான வெந்நீர், மற்றும் குடிநீர் கிடைத்திட மருத்துவமனை நிர்வாகத்தை கேட்டுக் கொள்வது, உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சட்ட ஆலோசகர் காளியப்பன், பன்னீர்செல்வம், கௌரவ ஆலோசகர் கவிதா மாரியப்பன், மற்றும் கோவிந்தராஜ், முத்துக்குமாரசாமி, கலீல்ரகுமான், செந்தில்வேல், தாதா பீர், இளங்கோ, சாகுல் ஹமீது, பால்ராஜ், செந்தில்குமார், நடராஜன், அழகுராஜ், துரைமுருகன், பிரேம் நசீர், குமார், பரமசிவன், கணேசன், பாலமுருகன், இசக்கிமுத்து, மணிகண்டன், குளத்தூர் ராஜா, சங்க பணியாளர் கோவிந்தராஜ், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் கிருஷ்ணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.