செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் பழமத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி முருகானந்தம் தலைமையில் பழமத்தூரில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது அக்டோபர் இந்த கிராம சபை கூட்டத்தில் கிராம வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் குறிப்பாக கிராமத்திற்கு சுத்தமான குடிநீர் விநியோகம் செய்வது ஜல்ஜீவன் அபியான்திட்டம் 100 சதவீதம் செயல்படுத்துவதுமற்றும் கிராமத்தில்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் முழுமையாக செயல்படுத்துவது, மேலும் தமிழக அரசின் சாதனை திட்டங்களை கிராம சபை கூட்டத்தில் தொலைக்காட்சி மூலம் காண்பிக்கப்பட்டது. மகளிர் உரிமை திட்டம் காலை உணவு திட்டம் புதுமைப்பெண் திட்டம் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் என்று பல்வேறு திட்டங்களை அரசு நிறைவேற்றியதை மக்களுக்கு காண்பித்தவுடன் தொடர்ந்து மக்கள் கருத்துகேட்பு கூட்டம் நடைப்பெற்றது.இதைதொடர்ந்துகூட்டத்தில் கிராமத்தின் வளர்ச்சிக்கு தேவையான 25க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி முருகானந்தம் தனது ஊராட்சிக்கு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகி றார்.மேலும்கிராமசபைகூட் டத்தை சிறப்பாக நடத்தி மக்களின் பராட்டையும் பெற்றுள்ளார்.கிராமசபை கூட்டத்தில் துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்,கிராம உதவியாளர், மக்கள் நலப் பணியாளர்கள், ஆசிரியர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.