கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சியில் உள்ள தமயந்தி அம்மாள் திருமண மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கிய கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியின் வடக்கு மண்டல தேர்தல் பணிக் குழு கூட்டம் தலைமை நிலைய பொறுப்பாளர், வடக்கு மண்டல தேர்தல் பணிக்குழு பொருப்பாளர் .உஞ்சை அரசன், தலைமை நிலைய பொறுப்பாளர், வடக்கு மண்டல தேர்தல் பணிக்குழு பொருப்பாளர் . தயா. நெப்போலியன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாாவட்ட செய்தி தொடர்பாளர் அனிச்சமலரவன் வரவேற்பினை தொடர்ந்து முன்னிலையாக மூ.தமிழ்மாறன் முன்னாள் மாவட்ட செயலாளர், சி. ராஜ்குமார் மண்டல செயலாளர், ச. பொன்னி வளவன் மண்டல துணைச் செயலாளர் ஆகியோர் அங்கம் வகித்தனர்.
மேலும் இக் கூட்டத்தில் மாவட்ட வேலை அறிவிப்பு பொறுப்பாளர்களாக வழக்கறிஞர் இரா.மதியழகன் தெற்கு மாவட்ட செயலாளர், வேல். பழனியம்மாள் வடக்கு மாவட்ட செயலாளர், சேந்தநாடு அறிவுக்கரசு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆகியோர் அங்கம் வகித்தனர். மேலும் கூட்டத்தில் பேரூர், நகர, ஒன்றிய பொறுப்பாளர்களிடம் எத்தனை ஊராட்சிகள், குக் கிராமங்கள், முகாம்கள், பூத்கள் உள்ளன என்பதைப் பற்றியும், அனைத்து ஊராட்சிகளிலும் முகாம்கள் உள்ளனவா, முகாம் இல்லாத ஊராட்சியில் முகாம் அமைத்து பூத்கமிட்டி அமைக்க முடியுமா என்று அனைத்து பொருப்பாளர்களிடமும் விபரம் கேட்டு, முகாமிற்கும், மேலிட பொருப்பாளருக்கும் எப்பொழுதும் தொடர்பு இருக்க வேண்டும் என்றும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு பணிபுரிந்து வெற்றியைப் பெற வேண்டும் என்றும் ஆலோசனை நடைபெற்றது.
மேலும் இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் துணைநிலை பொறுப்பாளர்கள், கிராம அமைப்பு பொறுப்பாளர்கள், தோழர்கள் என ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட பொருளாளர் கலையழகன் நன்றியுரை ஆற்றினார்.