திருத்தணியில் சமூக முன்னேற்ற சங்கத்தின். ( S.i.s) சட்டமன்றதொகுதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வன்னியர் சத்திரத்தில் இந்த அமைப்பின் மாவட்ட செயலாளர் ஆசிரியர் பலோ பழனி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில். தொகுதி செயலாளர் திருமால் வரவேற்புரையாற்றினார்.
சட்டமன்ற தொகுதியின் தலைவர் ஏழுமலை. மாவட்ட துணைத்தலைவர் ஆசிரியர் சேட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக பாமக மாவட்ட செயலாளர் இ. தினேஷ் குமார். மாவட்ட தலைவர் விஜயன். ஓய்வு பெற்ற தொலைபேசி துறை அதிகாரி. கவிஞர் சித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சமூக முன்னேற்ற சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் இரா. செல்வம் கலந்து கொண்டு விளக்க உரையாற்றினார்.
சமூக முன்னேற்ற சங்கம் என்பது கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுகிறது. டாக்டர் ராமதாஸ் தலைமையில் இயங்கும் பாமகவின்.தனி பிரிவாக செயல்படும் இந்த அமைப்பில் அரசு ஊழியர்கள். ஓய்வு பெற்ற அலுவலர்கள் கல்வியாளர்கள் அடங்குவர்.
தேர்தல் காலங்களிலும் மற்றும் கூட்டணி உள்ளிட்ட பேச்சு வார்த்தைகளிலும் இந்த அமைப்பு. அரசியல் சாராமல் தனிப்பட்ட முறையில் செயல்பட்டு பாமகவின் தேர்தல் யுத்தியை கையாளுகிறது. உள்ளிட்ட செய்திகள் கூட்டத்தில் பரிமாறப்பட்டது. நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலரின் ஓய்வு பெற்ற உதவியாளர் ஆர். நாகலிங்கம் பேராசிரியர் மைதிலி. ஆசிரியர்கள் பாஸ்கரன. கண்ணதாசன். உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர் இறுதியில் ஏழுமலை நன்றி கூறினார்.