கோவை மாவட்டம் இரத்தினம் கலை அறிவியல் கல்லூரியின் மாணவ ஆட்சிக்குழு பதவியேற்பு விழா நடைபெற்றது இதில் மாணவ ஆட்சி குழு தலைவராக வணிகத் துறை மாணவர் விஜய் ஆனந்த் பதிவியேற்றார்.உடன் ஏனைய நிர்வாகிகள் ஆட்சி குழு உறுப்பினர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துப் பதவி ஏற்றுக் கொண்டனர்.அதனை தொடர்ந்து பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பாக மாணவ மாணவிகளுக்கான பருவத்தேர்வில் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது, முதல் இடம் பெற்ற மான மாணவிகளுக்கு 50 சதவிகிதமும் இரண்டாம் இடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு 30 சதவிகதமும் மற்றும் மூன்றாம் இடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு 20 சதவிகதமும் கல்விக் கட்டணத்தின் அடிப்படையில் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தன்னம்பிக்கை பேச்சாளர் பிரியா செந்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.இந்த நிகழ்விற்கு கண்ஸாரியின் முதன்மை நிர்வரக அதிகாரியும் செயலாளருமான முனைவர் ஆர். மாணிக்கம் தலைமை தாங்கினார், கல்லூரியின் முதல்வர் முனைவர் பாலசுப்ரமணியன் வாழ்த்துரை வழங்கினார், மேலும் இந்நிகழ்வில் கல்லூரியின் துனை முதல்வர் முனைவர் சுரேஷ் வரவேற்புரையாற்றினார்.