சேலம் மாவட்ட வாணியர் சங்கத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் முப்பெரும் விழா நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் பள்ளி , கல்லூரி ,பாலிடெக்னிக் மாணவ ,மாணவியர்களுக்கு கல்வி ஊக்கப் பரிசுகளும் , பெண்களுக்கு இலவச தையல் இயந்திரமும் சங்கத்தின் மூலம் வழங்கப்பட்டது. மேலும் திருமணமாகாத ஆண் பெண்களுக்கு ஜாதகப் பரிவர்த்தனையும், இணையதளத்தில் வரன் பதிவு செய்தல் , சுயம்வரம் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தென்னிந்திய வாணியர் சங்கத்தின் செயலாளர் சங்கர், துணைத் தலைவர் ஐயப்பன், சிவசங்கர் மற்றும் பிற மாவட்ட தலைவர்கள் காந்தி, வடிவேல், சோமு ஆகியோர் கலந்து கொண்டனர் விழாவை சிறப்பித்தனர், சேலம் மாவட்ட வாணியர் சங்கத்தின் தலைவர் ராமலிங்கம் முப்பெரும் விழாவை வழி நடத்தினார் உடன் செயலாளர் முருகதாஸ், பொருளாளர் மனோகரன் , கௌரவத் தலைவர் பூபதி ஆகியோர் பங்கேற்றனர்