மாநில அளவிலான ஜுடோ போட்டிகள் பெரம்பலூரில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் 500 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் பரமக்குடி கீழமுஸ்லிம் மேல்நிலை பள்ளியை சார்ந்த மாணவிகளில் 17 வயதுக்குட்பட்ட மாணவிகள் பிரிவில் ஐ யுவஶ்ரீபிரபா எனும் மாணவி முதலிடத்தையும் தங்கப்பதக்கத்தையும் 14 வயதுக்குட்பட்ட மாணவிகள் பிரிவில் வாணிஶ்ரீ எனும் மாணவி மாநில அளவில் இரண்டாமிடமும் வெள்ளிப்பதக்கமும் பெற்றனர். இம்மாணவிகள் அடுத்த மாதம் பஞ்சாபில் நடைபெறும் தேசிய அளவிலான ஜுடோ போட்டியில் பங்கு பெறுகிறார்கள். வெற்றி பெற்ற மாணவிகளையும் உடற்கல்வி ஆசிரியர்கள் இந்திரஜித் சிவகுருராஜா அன்வர்ராஜா அன்புச்செல்வி ஆகியோரை கீழமுஸ்லிம் ஜமாஅத் தலைவர் எம் சாகுல்ஹமீது செயலாளர் எம் சாதிக்அலி பொருளாளர் ஏ லியாக்கதலிகான் மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் பள்ளியின் தாளாளர் என் ஜாஜஹான் தலைமை ஆசிரியர் எம் அஜ்மல்கான் உதவித்தலைமை ஆசிரியர் எம் புரோஸ்கான் உள்ளிட்ட ஆசிரியர்கள் பெரிதும் பாராட்டினர்.