.முதுகுளத்தூர்பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் கீழமானாங்கரை கிராமத்தில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது.
நான்காம் நாளில் கீழமானாங்கரை கிராமத்தில் வழிபாட்டு தளம் , மற்றும் கிராம தூய்மைபடுத்துதல் செய்யும் பணிகள் நடைபெற்றது.
நான்காம் நாளில் ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செம்பாலுடைய அய்யனார் திருக்கோவிலில் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி இந்திராகாந்தி புயல்நாதன் , உதவித்தலைவர் புயல்நாதன், கிராமத்தலைவர் ஜெயகாந்தி மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதன் பின்னர் மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டு உழவார பணிகளில் ஈடுபட்டார்கள்.