கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆலத்தூர் பேருந்து நிலைய காலனிக்கு செல்லும் வழியில் உள்ள பேருந்து நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடியை அகற்ற வேண்டும் என்றும், காலனி மக்களுக்கு கடைகளில் எந்த பொருளையும் தரக்கூடாது என்றும், சாதியை பற்றி இழிவாக பேசியும் 04.10.2023 அன்று ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தலித் சமுதாய அல்லாத அனைத்து சமூகத்தினரும் ஒன்று திரண்டு சங்கராபுரம்_ கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலை சுமார் 4 மணி நேரம் 500 க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த அபாயகரமான நிகழ்வை ஏற்றுக்கொள்ளாத ஆலத்தூர் தலித் சமுதாய மக்கள் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர கிராம முகாமைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில், ஆலத்தூரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடியை அகற்ற வேண்டும் என்று அனைத்து சமூகத்தினரும் ஒன்று சேர்ந்து தலித் சமுதாயத்தை தனிமைப்படுத்தும் நோக்கில் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்திய போராட்டக்காரர்களை எந்த ஒரு விசாரணையும், கைதும் செய்யாமல் இருப்பதினால், இந்த போராட்ட நிகழ்விற்கு காரணமான ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தலித் அல்லாத சமூகத்தைச் சார்ந்த முக்கிய நபர்களை சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென்றும், இல்லையென்றால் காவல் நிலையத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்று கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் மதியழகன் தலைமையில், முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ்மாறன், மாவட்ட செயலாளர்கள் சேந்தநாடு அறிவுக்கரசு, வேல்.பழனியம்மாள் மண்டல செயலாளர் ராஜ்குமார், மண்டல துணை செயலாளர் பொன்னிவளவன், மாநில கருத்தியல் பரப்புரை துணைச் செயலாளர் பாசறை பாலு, மாநில வணிகர் அணி துணைச் செயலாளர் கருப்பு துரை, மாவட்ட பொருளாளர் கலையழகன், மாவட்ட செய்தி தொடர்பாளர் அனிச்ச மலரவன், சங்கராபுரம் தொகுதி செயலாளர் அம்பிகாபதி, கள்ளக்குறிச்சி தொகுதி துணை செயலாளர் தமிழ் பொன்னி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழழகன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் பாவலன், ஒன்றிய செயலாளர்கள் மாணிக்க நிலவன், அலெக்சாண்டர், சேகர், கனகசபை, தலித்சந்திரன், கண்ணன், குபேந்திரன், சக்திவேல், நகரச் செயலாளர்கள் பச்சயாப்பிள்ளை, இடிமுரசு, சாமி சீனு, சாரங்கன் மற்றும் மாவட்ட ஓவிய அணி அமைப்பாளர் தனசேகரன் மற்றும் ஒன்றிய, நகர, கிராம விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பெண்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட ரீதியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக அறிவித்ததன் பேரில் விடுதலை சிறுத்தை கட்சியினர் கலைந்து சென்றனர்.