திருவண்ணாமலை அக்: 6 திருவண்ணாமலையில் தமிழ்நாடு நீதித்துறை பணி நிறைவுற்றோர் சங்கம் மற்றும் 18 வது மாநில பொதுக்குழு கூட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட 2 ஆம் ஆண்டு சங்க துவக்க விழா நடைபெற்றது விழாவிற்கு மாநில தலைவர் பொன் துரைராஜ் மாநில செயலாளர் வைத்தியநாதன் ஆகியோர் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் பழனிசாமி முன்னிலை வகித்தார் . இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
நமது சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்து மறைந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் இரங்கல் தெரிவித்து 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் 1.6.2016 முதல் வழங்க வேண்டிய 8 வது ஊதிய குழுவின் பரிந்துரைகளை 1. 10 .2017. முதல் அமுல்படுத்தி நிறுத்தி வைத்த 21 மாத நிலுவையில் உள்ள ஓய்வூதிய பலன்களை ஒரே தவணையில் அளித்திட வேண்டும்.
2016 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்கள் தங்களுக்கு பின்னர் அப்ப பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்களை விட குறைவாக ஓய்வூதியம் பெறுகிற நில நீடிக்கிறது இக்குறைபாட்டை ஒன்றிய அரசு தனது குறிப்பாணையின் மூலம் நீக்கி இருப்பது போல தமிழக அரசும் ஒரு பதவிக்கு ஒரே ஓய்வூதியம் என்று சமநிலையை ஏற்படுத்த வேண்டும்.
புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 22 அனைத்து நோய்களுக்கும் அனைத்து மருத்துவ மனைகளையும் தனியார் மருத்துவமனைகள் உட்பட சிகிச்சை அளிக்கும் வகையில் முன்பணம் கேட்டு நிர்பந்திக்காத வகையிலும் வெளிப்படை தன்மையோடு செயல்படுத்த வேண்டும் .என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் தங்கராஜ், மாவட்ட செயலாளர் ஏழுமலை, மாவட்ட பொருளாளர் பாஸ்கரன், இணை செயலாளர் செல்வம் ,தமிழ்நாடு ஒய்வூதியர் சங்க மண்டல செயலாளர் மாசிலாமணி ,ஆகியோர் கலந்து கொண்டனர் தமிழ்நாடு நீதித்துறை பணி நிறைவு சங்கம் சார்பில் நூற்றுக்கும் 150 க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.விழா முடிவில் மாவட்ட துணை தலைவர் கோவிந்தன் நன்றி கூறினார்.