காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, இரும்பு மற்றும் எஃகு ஆலையில் அமைந்துள்ள டவுன்ஹாலில் சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி மாற்றுத்திறனாளிகளின் தனித்துவமான திறன்களை ஊக்குவித்தது.சேலம் அன்பின் கரங்கள் மாற்றுத்திறனாளி அறக்கட்டளை,ஜென்னிஸ் கல்வி அறக்கட்டளை இணைந்து ரோட்டரி மாவட்டம் 2982 மண்டல் 14ன் கில் இருக்கும் வடக்கு ரோட்டரி சங்கம்,சேலம் விங்ஸ் ரோட்டரி சங்கம்,மேற்கு ரோட்டரி சங்கம் சேர்ந்து இரும்பு உருக்கு ஆலையில் உள்ள டவுன்ஹாலில் காந்திஜெயந்தி விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பாளர்களுக்கும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.இதில் கண்,பல்,உடல்ரீதியான மருத்துவ பரிசோதனை மற்றும் பொது மக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து மாற்று திறனாளிகளின் தனித்திறமை ஊக்குவித்து தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி,பதக்கம் அணிவித்து சிறப்பு செய்து கௌரவித்தனர்.இவ்விழாவில் மாற்றுத்திறனாளி அறக்கட்டளையின் தலைவர் மணிகண்டன், ஜென்னீஸ் கல்வி அறக்கட்டளை தலைவர் கர்லின் மேரி ஆகியோர் தலைமை தாங்கி நடத்தினார்கள்.இதில் ரோட்டரி மாவட்ட கவர்னர் தேர்வு 24-24.ரோட்டேரியன் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொணாடு சிறப்பித்தார்.ரோட்டரி துணை ஆளுநராக ரோட்டேரியன் உதயசங்கர் முன்னிலையில் விருந்தினராக கலந்து கொண்டார்.இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சேலம் மாவட்ட காவல்துறையின் துணை கமிஷனர் சந்திரமௌலி,இரும்பு உருக்காலையின் பொது மேளளார் வெங்கடாஜலபதி, அரசு தொழில் கல்வி திறன் மேம்பாட்டு உதவி தலைவர் இரவிச்சந்திரன் பெங்களூரு ரோட்டரி சங்க தலைவர் சைனி கிரேஸ் ,சண்முகா மருத்துவமனைபிரியதர்ஷிணி சசி ,கண் மருத்துவமனைடாக்டர் சசி, விநாயகா மிஷன் மருத்துவமனை மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.ரோட்டரி சங்க உறுப்பினர்கள் ரோட்டேரியன்கள்.அய்யப்பராஜ் ,அருண் குமார் ,தாமரை செல்வம்,நிர்மலா ,அர்ச்சனா ,காயத்திரி, வாசுகி ,சுஜாத்தா,ஹேமா பிரைட்,தில்லைக்கரசி ,மினுசுவேத்தா ,ஹரிப்பிரியா, சாராதா ,குமுதா, விங்ஸ் சங்கத் தலைவர்வசுமதி,செயலர் கர்லின் மேரி,வடக்கு ரோட்டரி சங்க செயலர்யுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கினார்கள்.