திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம் பூந்தோட்டம் அருகிலுள்ள கூத்தனூரில் புகழ்பெற்ற சரஸ்வதி கோயில் உள்ளது. இக்கோவிலுக்கு அருகில் ஒரு கிலோமீட்டர் வடக்கே
திலதர்ப்பணபுரி என்கிற செதலபதி என்ற கிராமம் உள்ளது. இங்கு அருள்மிகு முக்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் எங்கும் தரிசிக்க முடியாத வகையில் தும்பிக்கை இல்லாமல், இரண்டு கைகளுடன் விநாயகர் மனித முகத்தில காட்சி தருகிறார். விநாயகர் என்றாலே யானை முகத்தில் தோன்றுவதுதான் அனைவரும் அறிந்தது.

மனிதமுக விநாயகர் செதலபதியிலுள்ள முக்தீஸ்வரர் கோவிலில் மட்டுமே விநாயகர் மனித முகத்துடன் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலிக்கிறார். இதுபற்றி புராண
வரலாறு உங்களுக்காக…

பார்வதி தேவி தன் உடலில் இருந்து ஆண் குழந்தை ஒன்றை உருவாக்கி அதற்கு விக்னேஸ்வரன் என்று பெயரிட்டாள். ஒரு நாள் மனித முகத்துடன் இருந்த விக்னேஸ்வரரை அழைத்த

தன் இருப்பிடத்திற்கு யாரையும் அனுமதிக்க வேண்டாமென கட்டளைப் பிறப்பித்தார். விக்னேஸ்வரன் வாசலில் காவலுக்கு இருந்த போது அங்கு வந்த சிவபெருமானையும், பார்வ திதேவியின் இருப்பிடத்திற்கு அனுமதிக்கவில்லை.. பார்வதியின் கணவர் என்று கூறியும் அனுமதிக்க மறுத்துவிட்டார். இதனால் சிவனுடன் வந்த நந்தீஸ்வரர் விக்னேஸ்வர தலையை வெட்டிவிட்டார்.

விவரமறிந்து ஓடிவந்த பார்வதி தன் மகனை உயிரப்பிக்க வேண்டும் என்று அழுதாள். உடனே சிவன் தன் பூதகணங்களிடம் வடக்கு நோக்கி யார் படுத்துகின்றனரோ அவரின்  தலையைக் கொய்து, கொண்டு வாருங்கள் என்று ஆணையிட்டார்.
அப்போது யானை ஒன்று வடக்கு நோக்கி படுத்திருக்க, அதன் தலையை பூதகணங்கள் கொய்து எடுத்து வந்தனர். சிவன் அந்த யானைத் தலையை குழந்தைக்குப் பொருத்தி  உயிர்ப்பித்தார். அத்துடன் அந்த குழந்தையை தன் பூதகணங்களுக்குத் தலைவனாக்கி கணபதி என்று பெயர் வைத்தார்.
பக்தர்கள் எந்த பூஜை செய்தாலும் கணபதியை வழிபட்டபின் தொடங்கினால் வெற்றி கிடைக்கும் என்ற சிறப்பு அந்தஸ்தையும் அளித்தார்.