அ.தி.மு.க. –பா.ஜ.க. கூட்டணி முறிவு என்பது தமிழ் நாட்டில்
சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற அ.தி.மு.க. நடத்தும் கபட நாடகம் என
திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க .மாவட்ட செயலாளருமான பூண்டி
கே.கலைவாணன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் ஒன்றியத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் அவைத்தலைவர்
எம்.செல்வராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது . ஒன்றிய செயலாளரும்
ஒன்றிய பெருந்தலைவருமான புலிவலம்.ஏ.தேவா அவர்களின் தலைமையில்
நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன்
எம்.எல்.ஏ.,பங்கேற்று கருத்துரையாற்றினார்.
அப்போது அவர் “தமிழ்நாட்டில் திராவிட நாயகர் முதல்வர் மு.க.ஸ்டாலின்
அவர்கள் இந்திய துணைப்பெருங்கண்டத்திலேயே இல்லாத அளவுக்கு சாதனை
திட்டங்களை அமுல்படுத்தி மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார்.குறிப்பாக
பெண்களின் முன்னேற்றத்திற்காக முதல்வரின் புதுமைப்பெண், இலவச பேருந்து,
மகளிர் உரிமைத்திட்டம் போன்றவை மக்களின் பேராதரவை பெற்றுள்ளது .
எதிரணியினர் இந்த திட்டங்களைப்பற்றி, குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை
திட்டத்தை விமர்சித்து வந்தநிலையில், மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின்
அவர்கள் இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்து எதிர் கட்சிசினரின்
விமர்சனத்தை சிதறடித்துள்ளர்.
மேலும் ஒரு கோடி பேருக்கு உரிமைத்தொகை அறிவிக்கப்பட்ட நிலையில்
தற்போது ஒருகோடியே ஆறு லட்சத்து ஐம்பதினாயிறம் பேருக்கு மகளிர்
உரிமைத்தொகை திட்டத்தை வழங்கியிருப்பதோடு , விடுபட்ட நபர்களுக்கும்
வழங்க தி.மு.க .ஆட்சி தேவையான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இந்த
சாதனைகளை தி.மு.க.வினர் மக்களிடம் சென்று பேசவேண்டும்.
அதேபோல தற்போது பா.ஜ.க.வினரோடு அ.தி.மு.க. கூட்டணி வைத்திருந்தால்,
பா.ஜ.க .மீது நாடு முழுவதிலும் மக்கள் கொண்டுள்ள கோபத்தால் வாக்குகளை
பெறமுடியாது , குறிப்பாக சிறுபான்மை இன மக்களின் வாக்குகளை பெறமுடியாது
என்பதால் கூட்டணி முறிவு என்கிற நாடகத்தை நடத்திவருகிறது. இந்த நாடகத்தால்
மக்களை ஏமாற்ற முடியாது எனவும், இந்தியாவிலேயே நமது நாகை நாடாளுமன்ற
தொகுதிதான் நடைபெறவிருக்கும் தேர்தலில் முதல் வெற்றியை பறைசாற்றும்
எனவும், அது இந்திய அளவில் மிகப்பெரிய வித்தியாசத்தில் இந்தியா கூட்டணியின்
வெற்றியாக அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டு பேசினார்.
கூட்டத்தில் ஒன்றிய துணை செயலாளர் தம்பி செந்தில் ,மாவட்ட சார்பு அணி
அமைப்பாளர்கள் சி.கே.எழிலரசன் ,புருஷோத் , வெங்கடேசன் உள்ளிட்ட கழக
நிர்வாகிகள் பங்கேற்றனர்.