தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 32 ஊராட்சிகளுக்கு சுமார் 1.36 கோடி மதிப்பீட்டில் குப்பை அள்ளுவதற்கான 58 மின்கல வண்டியினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்,இராமச்சந்திரன் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் முன்னிலையில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் திவ்யா மணிகண்டன், ஊராட்சி ஒன்றிய குழுத் துணைத்தலைவர் செல்வகொடி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் தமிழ்செல்வி போஸ், ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திலகராஜ், கணேசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.