மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைங்கினங்க கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையில் இருந்து விவசாயிகளின் நலன் கருதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக மாண்புமிகு தமிழ்நாடு நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் வருகை புரிந்து அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்து சிறப்பித்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் .ஷர்வண்குமார் அவர்கள் இந்நிகழ்வில் முன்னிலை வகித்தார்.

     மேலும் இந்த நிகழ்வில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான .தா.உதயசூரியன் வரவேற்புரை வழங்கியும், தலைமை வகித்தும் சிறப்பித்தார். 

     கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட கழக அவைத்தலைவர் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் .A.J.மணிகண்ணன், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் .வசந்தம்.க.கார்த்திகேயன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்வில் சின்னசேலம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர், ஒன்றிய குழு துணைத்தலைவர் .v.v.அன்புமணிமாறன், வடகனந்தல் பேரூர் கழக செயலாளர் .ஜெயவேல, சின்னசேலம் பேரூர் கழக செயலாளர் .செந்தில், கள்ளக்குறிச்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் .அலமேலு.ஆறுமுகம், சங்கராபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் .திலகவதி நாகராஜ், சங்கராபுரம் நகர கழக செயலாளர் .துரை.தாகப்பிள்ளை, மாவட்ட கவுன்சிலர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அருள், மாவட்ட கவுன்சிலர் வேல்முருகன், சின்னசேலம் வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜெயம் கோம்பையன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர், கழக நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், ஏரி நீர் பாசன சங்க நிர்வாகிகள், கழக முன்னோடிகள் என ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.