ஆலங்குளத்தில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்டத்தில் தெர்குதிக்கு ஒரு கலைஞர் படிப்பகம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் கலந்து கொண்டனர்.
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் ஆலங்குளத்தில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் சுந்தரமகாலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலன் வரவேற்று பேசினார். தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆலோசனைகளை வழங்கி பேசினார். கூட்டத்தில் மாநில சுற்றுச்சூழல் அணித்தலைவர் பூங்கோதை ஆலடி அருணா, மாவட்ட ஊராட்சித் தலைவர் தமிழ்செல்வி, ஆலங்குளம் யூனியன் சேர்மனும், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளருமான திவ்யா மணிகண்டன், செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, ஆறுமுகச்சாமி, சேக்தாவூது, ஜேசுராஜன், துணை செயலாளர்கள் கென்னடி, தமிழ்செல்வன், பொருளாளர் எம்.ஏ.எம்.ஷெரீப், ஒன்றிய செயலாளர்கள் சீனித்துரை, சிவன்பாண்டியன், ரவிசங்கர், செல்லத்துரை, அன்பழகன், சுரேஷ், திவான்ஒலி, மாரிவண்ணமுத்து, நகர செயலாளர் சாதிர், வெங்கடேசன், அப்பாஸ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட பிரிதிநிதிகள் பொன்செல்வன், சுந்தரம் (எ) சேகர், ஜெகேபி எ ஜெயக்குமார் பாண்டியன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டி ஆர் கிருஷ்ணராஜா, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சங்கீதா சுதாகர், செயற்குழு உறுப்பினர்கள் அருள், சாமிதுரை, ரவிச்சந்திரன், ராஜேஸ்வரன், ரஹீம், கதிர்வேல்முருகன்,பேரூர் செயலாளர்கள் நெல்சன், முத்தையா, ஜெகதீசன், முத்து, பண்டாரம், குட்டி. சிதம்பரம், ராஜராஜன், தங்கப்பா, லெட்சுமணன், அழகேசன், ஆய்க்குடி பேரூராட்சி தலைவர் சுந்தர்ராஜ், ஆலங்குளம் சுதா மோகன்லால், மாநில விவசாய அணி துணைத்தலைவர் செல்லப்பா, கீழப்பாவூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் பொன்.அறிவழகன்,முன்னாள் துணைத்தலைவர் தங்கச்சாமி, தொண்டரணி அமைப்பாளர் இசக்கிபாண்டியன், மாவட்ட வழக்கறிஞர்; அணி துணை அமைப்பாளர் எஸ்.கே.மயிலவன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் மணிகண்டன், தங்கப்பாண்டியன், தளபதி சிவராஜன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாஸ்டர் கணேஷ், மற்றும் நிர்வாகிகள் சாம்பவர்வடகரை மாறன், துணை சேர்மன் கனகராஜ் முத்துபாண்டியன், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கிருஷ்ணராஜா, சிவக்குமார், ஐவேந்திரன் தினேஷ், முகமது அப்துல்ரகீம், சுப்பிரமணியன், முன்னாள் நகராட்சி சேர்மன் கோமதிநாயகம், மாணவரணி துணை அமைப்பாளர் சுப்பையா, வளன் அரசு, இஞ்சி இஸ்மாயில், சுந்தரபாண்டியபுரம் செல்வகுமார், வார்டு செயலாளர் ராமராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயராணி கலைச்செல்வன், திரவியக்கனிகுணரத்தினம், துணைத்தலைவர் ஜெயராணி அந்தோணிராஜ், இளைஞரணி கோமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களை கடையம் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் வாசித்தார்.. தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
விரைவில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக பாகமுகவர்கள் அனைவரையும் தயார்படுத்தி வாரந்தோறும் ஆலோசனைக்கூட்டம் நடத்துவது, கூட்டுறவு சங்க தேர்தலையொட்டி இந்த வாரத்திற்குள் அதிக உறுப்பினர்களை சேர்ப்பது, டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள இளைஞரணி மாநாட்டிற்கு திரளான ஆர்வமுள்ள இளைஞர்;களை தயார் படுத்தி அழைத்து செல்வது, மாநில இளைஞரணி செயலாளரும்,தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் வேண்டுகோளுக்கிணங்க தெர்குதிக்கு ஒரு கலைஞர் படிப்பகம் அமைத்திட ஏற்பாடு செய்வது, கடந்த செப்.5ந் தேதி தென்காசிக்கு இளைஞரணி செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அழைத்து வந்து, மிகச்சிறப்பான இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டமும், மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் கூட்டமும் நடத்தி பெருமை சேர்ந்த தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம் நன்றி கூறினார்.