ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஓபிஎஸ் சார்பில் வெள்ளி முலாம் பூசப்பட்ட திருவாச்சி அணிவிக்கப்பட்டது.கமுதி அருகே உள்ளபசும்பொன் முத்துராம லிங்கத் தேவர் நினைவிடத்தில் வரும் மாதம் 30 ம் தேதி 61-வது குருபூஜை மற்றும் 116- வது ஜெயந்தி விழா நடைபெற உள்ளது .

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28 ம் தேதி ஓ.பன்னீர் செல்வம் குடும்பம் சார்பில், தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு சார்பில் சுமார் 10.5 கிலோ எடை கொண்ட வெள்ளி கவசம் வழங்கபட்டு இருந்தது.இந்நிலையில் , அந்த வெள்ளி கவசம் இன்று தேவர் சிலைக்கு ஒபிஸ் மகன் விஜயபிரதீப் முன்னிலை யில் மீண்டும்  அணிவிக்க பட்டது. மேலும் புதிதாக இந்த ஆண்டு செய்யப்பட்ட 12 கிலோ எடையுள்ள தாமிரத்தால் செய்து வெள்ளி முலாம் பூசப்பட்ட திருவாச்சியும் பூஜைகள் நடத்தி அணிவிக்கபட்டது.இதனையொட்டி தங்க கவசம் வரும் வரை வெள்ளி கவசம், அணிவிக்கபட்டு துப்பாக்கி ஏந்திய  போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.இந்நிகழ்ச்சியில் தொகுதி கழகச் செயலாளர் மூக்கையா,ஒன்றிய செயலாளர்கள்கருப்புச்சட்டை முருகேசன்,முத்துராமலிங்கம், வாசு,அழகு சரவணன்,மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் பரிதி,இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சின்னாண்டு,தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சோலைமுருகன் உட்படபலர் கலந்து கொண்டனர்.