திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் சுல்லெரும்பு கிராமத்தில் ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் உள்ளதுகடந்த 27_09_2023 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது இக்கோவிலில் பைரவருக்கு தனி சன்னதி உள்ளது மேலும் விநாயகர் முருகன் தட்சிணாமூர்த்தி ஒன்பது நவகிரகங்கள் ஆகிய தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னதி உள்ளது நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு 11 வகையான அபிஷேகம் ஆராதனை சிறப்பாக நடைபெற்றது இதில் முரு நெல்லிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சின்னு என்ற முருகன்,துணைத் தலைவர் வி.பி.செந்தில்குமார்,சுக்காம்பட்டி ஊர் கவுண்டர்பெரிய ராஜ், கோவில் நிர்வாக குழு செல்வராஜ், சுல்லெரும்பு சுக்காம்பட்டி பழைய கோட்டைஊர் பொதுமக்கள் மற்றும் சுற்று வட்டார பகுதி ஆன்மீக அன்பர்கள் பெரும் திரளானோர்கள் கலந்து கொண்டனர்முன்னதாக பைரவர் பூஜைக்கு வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பாக புளியோதரை,தயிர் சாதம்,பிரசாதமாக வழங்கப்பட்டதுமேலும் கோவில் நிர்வாக குழு பழைய கோட்டை செல்வராஜ் கூறியதாவது ஒவ்வொரு பிரதி மாதமும் தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு பூஜை பால் அபிஷேகம் நடைபெறும் இந்த பூஜையில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள்முன்கூட்டியே ரூபாய் 200ஐ.செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளுமாறு பக்தர்களை கேட்டுக்கொள்கிறேன் என்று கூறுகிறார்