தமிழக முழுவதும் அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை தகவல் உரிமை பெறும் சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதே போல் தேனி மாவட்டத்திலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை சார்பிலும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் தேனியில்
தகவல் உரிமை பெறும் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் தேனி அல்லிநகரம் கான்வென்ட்லிருந்து பங்களாமேடு வரை பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது மேலும் பங்களாமேட்டில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் விதமாக மீண்டும் மஞ்சப்பை கொண்டு வர வேண்டும் என்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது