ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் ஏர்வாடி ஊராட்சி அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது

 கடலாடி கிழக்கு  தாலுகா குழு நம்புராஜன் யில் முருகேசன்  குமார் ராமநாதன் முருகராஜ் ராக்கம்மாள் சிக்கந்தர் பாஷா உள்பட ஏர்வாடி பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிடவலியுறுத்தி மார்க்கஸ் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏர்வாடிஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும்  போராட்டம் நடைபெற்றது.

இடியும் நிலையில் உள்ள ரேஷன் கடையை மாற்றி புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் ஏர்வாடி தர்கா முதல் சடை முனியன் வலசை வரை உள்ள சாலை மிக மோசமாக குன்டும்குழியுமாக உள்ள சாலையை சீரமைக்கவும்ஏர்வாடி தர்கா முதல் சேர்மன் தெரு முத்தரையர் நகர் வழியாக காட்டுப்பள்ளி வரை செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்சின்ன ஏர்வாடியில் பயனற்றுக்கிடக்கும்   ஆர்ஒ பிளாண்ட்டை சரி செய்ய மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்ஏர்வாடி ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமனம்  செய்து இரவு நேரங்களில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்100 நாள் வேலை திட்டத்தை முறைப்படுத்தி சம்பளத்தை காலதாமதம் இன்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்ஏர்வாடியில் உள்ள கிராம பொதுமக்கள் இலவச அரிசி வாங்க ஆட்டோவிற்கு 100 ரூபாய் செலவு செய்ய வேண்டிய அவல நிலை உள்ளதுபுதிய தெருவிளக்கு அமைக்க பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை அமைக்கப்படவில்லைஅடிக்கடி100 நாள் வேலை ஆட்களை வைத்து கிராமசபை கூட்டம் நடத்தி வருவது தர்கா மீன் மார்க்கெட் தினசரி கடை ஒன்றுக்கு 40ரூபாய் வசூலிப்பதில் கவனம் செலுத்தும் ஊராட்சி நிர்வாகம் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை

ஏர்வாடி ஊராட்சி பராமரிப்பு பணிக்கு ஆண்டிற்கு ஒரு கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் வருகிறது அந்த பணத்தை கிராமங்களுக்கு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வதில்லை 

ஏர்வாடி தர்கா ஒரு ஆன்மீக சுற்றுலா தளம் ஆகும் இங்கு வரக்கூடிய பக்தர்கள் சாலையில் காட்டுப்பள்ளி தர்காவிற்கு கிழக்குப் பகுதியாக நடந்து செல்ல வேண்டும் அந்தப் பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் உள்ள கழிவு நீர்களை சாலையில் அடிக்கடி திறந்து விடுவது சுகாதாரத்துறை அதிகாரிகள் ஊராட்சி நிர்வாகமும் கண்டு கொள்வதில்லை

ஏர்வாடி ஊராட்சிக்கு 10 கோடி ரூபாய் 2022 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை வருமானம் வந்துள்ளது. என்று பல கோரிக்கைகளை முன்வைத்தனர் மாவட்டச் செயலாளர் காசிநாதன் துறை மாவட்ட செயற்குழு முத்துராமு மாவட்ட செயற்குழு மயில்வாகனன் தாலுகா செயலாளர் அம்ஜத் கான் தாலுகா குழு உறுப்பினர்கள் பச்சம்மாள் போஸ் சுப்பிரமணியன் சக்தி குமார் ராமசாமி ஜெயக்குமார் ராமாயி போராட்டத்தை கலந்து கொண்டனர். போராட்டத்தை சுமுகமாக பேசி முடிப்பதற்கு கீழக்கரை தாசில்தார் பழனி குமார், துணை தாசில்தார் பரமசிவம் கடலாடி ஆணையர் ஜெய ஆனந்த் கீழக்கரை துணை கண்காணிப்பாளர் பொறுப்பு விஜயகுமார் ஏர்வாடி ஆய்வாளர் லட்சுமி சிக்கல் ஆய்வாளர் முருகதாஸ் கீழக்கரை ஆய்வாளர் வேல்முருகன் ஏர்வாடி கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.