கோவை மாவட்டம் கே.எம்.சி.எச்.மருத்துவமனை சார்பாக  மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியாக பந்தய சாலை பகுதி  முழுவதும் பிங்க் வண்ணத்தால் ஒளிர வைத்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு  நிகழ்ச்சி உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது  கே.எம்.சி.எச்.மருத்துவமனையின் துணை தலைவர் தவமணி தேவி பழனிசாமி, நிர்வாக இயக்குனர் அருண் பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி,மாநகராட்சி ஆணையர் மு. பிரதாப்,மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பவானீஸ்வரி,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், காவல்துறை இணை ஆணையர் சந்தீஷ், ஆகியோர் கலந்து கொண்டு கையெழுத்திட்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் மேலும் கே.எம்.சிஹெச் மருத்துவமனையின் துணை தலைவர் தவமணி தேவி கூறுகையில் புற்றுநோயை வெற்றி கொள்வதில் எடுத்து வரும் முயற்சிகளுக்கும் அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களுக்கும் ஆதரவு தெரிவிக்கும் அடையாளமாக பிங்க் வண்ணம் இருப்பதால் உலக சுகாதார நிறுவனம் அக்டோபர் மாதத்தை பிங்க் மாதமாக அறிவித்துள்ளது அந்த வகையில் மார்பக புற்றுநோய் குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பந்தய சாலை முழுவதும் பிங்க் வண்ணத்தால் ஒளிர செய்யப்பட்டது மார்பக புற்றுநோய் என்பது குணப்படுத்த முடியாத நோய் இல்லை எனவும் அதற்கான அதிநவீன மருத்துவ சிகிச்சைகள் தங்களது மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்