வேலூர் மாவட்டம், அரசு போக்குவரத்து கழகம் வேலூர் மண்டலம் ரங்காபுரம் வேலூர் மற்றும் கொணவட்டம் பணிமனை1 மற்றும் 2 ஆகிய இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் பிறந்தநாள் விழாவினையொட்டி தொழிற்சங்க கொடியேற்று விழாவும், சங்க பெயர் பலகை திறப்பு விழாவும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டமும், வேலூர் மண்டல பொதுச் செயலாளர் வி .ச. மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்றது .வேலூர் மண்டல தலைவர் தயா .கார்த்திக் முன்னிலை வகித்தார். மு.மா.தொ. செயலாளர் என் .சேகர் வரவேற்பு உரையாற்றினார் வேலூர் மண்டல பொருளாளர் சி.டோஜோ சிறப்புரையாற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளர்கள் மு.நடுவணரசு அமைச்சர் என் டி சண்முகம், பாமக வேலூர் மாவட்ட தலைவர் பி.கே .வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு தொழிற்சங்க கொடியேற்றிவைத்தும், பெயர்ப்பலகை திறந்து வைக்த்தும் ,இனிப்பு வழங்கினர். இதில் மாவட்டத் துணைச் செயலாளர் ஆர்.துளசிராமன், சமூக ஊடகம் பேரவை மாவட்ட தலைவர் எஸ் .தேவா ,மாவட்ட தொழிற்சங்க தலைவர் ஜி. வெங்கடேசன், மாநில ஓட்டுநர் சங்கத் துணைத் தலைவர் எம் .கார்த்திகேயன், முன்னாள் மண்டல தலைவர்கள் ,செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் .நிகழ்ச்சியின் நிறைவாக வேலூர் மண்டல பொருளாளர் சி.டோஜோ நன்றி உரையாற்றினார்.