மதுரை அண்ணாநகர் அம்பிகா திரையரங்கம் பகுதியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் குறிப்பாக எம்எஸ்சி,AIF திட்டத்தை கட்டாயப்படுத்தி அமல்படுத்துவதை கைவிட வேண்டும்,நகர கூட்டுறவு கடன் சங்கம்,தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களின் ஊதிய குழுவின் அறிக்கையினை விரைவில் பெற்று ஊதிய உயர்வு உடனடியாக அறிவிக்க வேண்டும், சங்கங்களில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்ப வேண்டும்,2001 க்கு பின்னர் பணி ஓய்வு பெற்ற அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும், பணியாளருக்கு பதவி உயர்வு வழங்குவதில் உள்ள நடைமுறை பிரச்சனைகளை நீக்கி அனைவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் அக்டோபர் 12 அன்று மாநிலம் முழுவதும் சுமார் 40000 பணியாளர்கள் 7 மண்டலங்களிலிருந்து கலந்துகொண்டு சிறை நிரப்பும் சாலை மறியல் போராட்டம் நடைபெற இருக்கிறது என்று தெரிவித்தனர்.