கோவை மாவட்டம்  பொள்ளாச்சி  சேரன் நகர் பகுதியில் வசித்து வந்த ஓய்வுபெற்ற அரசு பேருந்து நடத்துனர் ஆறுமுகம் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சாலைவிபத்தில் அரசு பேருந்து மோதி அடிபட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பழனிற்றி உயிரிழந்தார்.உயிரிழந்த ஆறுமுக குடும்பத்தார் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 2017 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பில் ரூ.6,65000 இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரையிலும் இழப்பீடு வழங்க வில்லையென்று சிறப்பு விபத்து காப்பீடு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் ரூ.9,51429 வழங்கவேண்டுமென்று தீர்ப்பு வழங்கியது.அதனைத் தொடர்ந்த  நீதிமன்ற ஊழியர் மருதய்யன் அரசு பேருந்து வழிதட எண்11 பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்றத்திடம் ஒப்படைத்தார்.