பண்டிகை காலத்தையொட்டி தங்கள் இணையதளத்தில் இந்தியா மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள விற்பனையாளர்களின் தயாரிப்புகளை அவர்கள் அதிக அளவில் விற்பனை செய்ய பல்வேறு நடவடிக்கைகளை அமேசான் எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக அமேசான்.இன் இணையதளத்தில் வரும் நவம்பர் 4-ந்தேதி வரை இணையும் புதிய விற்பனையாளர்களுக்கு பரிந்துரை கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடியையும் இந்நிறுவனம் வழங்குகிறது. இந்த சலுகை அவர்கள் இணைந்த நாளிலிருந்து 60 நாட்களுக்கு செல்லுபடியாகும். சமீபத்தில், இந்நிறுவனம் மல்டி-சேனல் புல்பில்மெண்ட் திட்டத்தை அறிவித்தது. இது வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர்களை எளிதாக டெலிவரி செய்ய உறுதுணையாக இருப்பதோடு, விற்பனையாளர்கள் இந்தியா முழுவதும் 100 சதவீத சேவை செய்யக்கூடிய பின்-கோடுகளையும் வழங்குகிறது.

 அமேசான்.இன் புதிய ‘‘கிரேட் இந்தியன் ரெபரல் ஆபர்’’ என்னும் திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் இதில் ஏற்கனவே உள்ள விற்பனையாளர்கள் தங்கள் நண்பர்களை இந்த தளத்திற்கு அறிமுகம் செய்வதன் மூலம் 11,500 ரூபாய் மதிப்புள்ள வெகுமதிகளைப் பெறலாம். இந்த வெகுமதி திட்டம் வரும் 27-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சேல் ஈவன்ட் பிளானர்’ என்னும் திட்டமானது விற்பனையாளர்கள் தங்கள் தயாரிப்புகளுக்கு சிறந்த தள்ளுபடிகளை வழங்க உதவுவதோடு, அவர்களின் சரக்குகளை முன்கூட்டியே திட்டமிடுதல் மற்றும் அவர்களின் விற்பனையை வளர்க்கும் திறன் கொண்டதாக இருப்பதோடு, அமேசான் சந்தையில் முதல் முறையாக நுழையும் விற்பனையாளர்களுக்கு உதவியாகவும் இருக்கும். ‘அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல்’ அக்டோபர் 8 முதல் துவங்கி இருப்பதால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் தங்கள் வணிகத்தை வளர்க்க இது ஒரு பெரிய வாய்ப்பாக அமையும் என அமேசான் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.