மகாபலிபுரம் பகுதியில் முன்னால் E.C.R ஆட்டோ  ஓட்டுநர்   சங்க தலைவர்  மல்லை சரவணன் அவர்களின் ஏற்பாட்டில் சரணாலயம் என்ற புதிய ஆட்டோ ஸ்டாண்ட் நிறுத்தமிடம் உருவாக்கப்பட்டுள்ளது  சமூக ஆர்வலர்கள்  பொது மக்கள்  வரவேற்பு சரவணன் அவர்களிடம் இது குறித்து நாம் கேட்டபோது அவர் கூறியதாவது சரணாலயம் என்ற சொல்லுக்கான

தோற்றப் பொருள் யாதெனில், புனித இடம் என்பதாகும். நடைமுறையில்  பாதுகாப்பான இடம் என புரிந்துணரப் படுகிறது. அரசியல் தஞ்சம், உயிரினப் புகலிடம், முதியோர் காப்பகம் போன்றவை இதன்

அடிப்படையில் தோன்றியவை ஆகும்.  இந்த சரணாலயம் ஆட்டோ ஸ்டாண்டில் எந்த பாகுபாடும் இருக்காது ஏற்றத்தாழ்வுகளும் இருக்காது யார் வேண்டுமானாலும் வந்து இந்த சரணாலயம் ஆட்டோ ஸ்டாண்டில் பதிவு பெற்று இப்பகுதியில் ஆட்டோ ஓட்டலாம் இந்த ஆட்டோ ஸ்டாண்ட் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத அளவுக்கு இருக்க வேண்டும் என்ற புனித நோக்கத்தோடு சரணாலயம் என்று பெயர் சூட்டி அனைவரையும் அரவணைத்து செல்லும் உன்னத நோக்கத்தோடு சரணாலயம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் இதை அனைவரும் வரவேற்பார்கள் என நம்புவதாக மல்லை சரவணன் அவர்கள் கூறியுள்ளார் இது குறித்து அப்பகுதி பொதுமக்களிடம் கேட் போது இந்த சரணாலயம் என்ற பெயரே வித்தியாசமாக உள்ளது எனவும் சராணாலயம் ஆட்டே ஸ்ட்ண்ட் இதை நாங்கள்  மணபூர்வமாக வரவேற்கிறோம் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்