செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டத்திற்கு உட்பட்ட பள்ளி அகரம் பகுதியில் வசிப்பவர்கள் மனோகரன் ஆதிலட்சுமி தம்பதி இவர்களுக்கு அதே பகுதியில் 41 சென்ட் நிலம் விவசாயம் நிலம் உள்ளது. இந்த நிலம் கடந்த 1986 ஆம் ஆண்டு ஆதிலட்சுமிக்கு பெற்றோர் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடம் அருகில் உள்ள கோவில் பெயரில் பட்டா மாறுதல் ஆகி உள்ளது. இதை அறிந்த வயதான நோயால் பாதிக்கப்பட்ட தம்பதி 5 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருவதாக கூறும் வயதான தம்பதியர் தங்களால் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனு மீது விரைந்து நடவடிக்கை எடுத்து விசாரித்து பட்டாவை திருத்தி வழங்க வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர். மேலும் தங்களால் முடியவில்லை காலதாமதம் ஆகுமாயின் தங்களை கருணைக்கொலையாவது செய்து விடுங்கள் என்று கதிரினர்.