யூரியா கூட்டுறவு சங்கங்களில் ஸ்டாக் வைத்திருந்தால் விவசாயிகளுக்கு தேவையானபோது கிடைக்கும் எனவே கூட்டுறவு சங்கங்களில் போதுமான யூரியா கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதுகுளத்தூர் யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினார்கள். முதுகுளத்தூர் யூனியன் கவுன்சில் கூட்டம் யூனியன் சேர்மன் சண்முகபிரியா ராஜேஷ்தலைமையில் ஆனையாளர் ஜானகி துணைத்தலைவர் கண்ணகி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மேனேஜர் சிவகாமிஅனைவரையும் வரவேற்றார். மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர்களிடையே விவாதம் வருமாறு அர்ச்சுனன் (வளநாடு ) தாழியே நந்தல் கிராமத்திற்கு வறட்சி நிவாரணம் கிடைத்துவிட்டன. ஆனால் இன்சூரன்ஸ் வழங்கப்படவில்லை. (கேசவராமன் வேளாண்மை உதவி இயக்குநர்) 9 கிராமங்கள் இறுதி முடிவு எடுக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.சண்முகபிரியா ராஜேஷ் (யூனியன்சேர்மன்) என்ன காரணங்களால் இன்சூரன்ஸ் வழங்காமல் நிறுத்தப்பட்ட விபரம் விவசாயிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். சசிகலா(கருமல்) பழங்குளம் தார்சாலை பழுதடைந்துள்ளதை மராமத்து செய்ய வேண்டும். அர்ச்சுனன் (வள நாடு,) மட்டியரேந்தல், பொன்னக்கனேரி கிராமங்களுக்கு காவேரி குடிநீர் வருவதில்லை. ஆனால் வழிநெடுக உடைப்பு ஏற்பட்டு வீணாகிறது. சண்முகபிரியா ராஜேஷ் (யூனியன் சேர்மன்) காவேர் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீனாவதால் கிராம மக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். ஆகையால் உடைப்பை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு விவாதம் நடைபெற்றது. முடிவில் மேனேஜர் சிவகாமி நன்றி கூறினார்.