தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சேலம் மாவட்டத்தின் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு வார விழா மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில் விநாயகம் தலைமையில் நடைபெற்றது .இந்த விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சின்னக்கடை வீதி வழியாக சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் முடிந்தது. இதில் ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் முத்துராஜ், அக்பர் ஷரீப் ,உதவி பொறியாளர்கள் அஜய், கோகுல் ,பாலாஜி, பெரியார் யூனிவர்சிட்டி ப்ரொபசர் டாக்டர் இளங்கோவன் மற்றும் ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.