திருவள்ளூர் மாவட்டம்,ஏலியம்பேடு மகேந்திரா சிட்டிவளாகத்தில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடைபெற்றது.இதில் மாவட்டம் முழுவதும் 200 பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.14 மற்றும் 16 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகளுக்கு மூன்று பிரிவுகளில் நடைபெற்ற சைக்கிள் போட்டியானது மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்நரசிம்மராவ் முன்னிலையில் மகேந்திரா சிட்டி தொழிற் பூங்கா பொது மேலாளர் முகுல்ராயன் தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக டிஜே கல்வி குழும தாளாளர் தினேஷ் மற்றும் பெருவாயல் ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகர்,ஏலியம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.இதில் வெற்றி பெற்ற வீரர்கள் மாநில அளவில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கதுரகுபதி மாவட்ட தலைவர் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் குறுவட்ட செயலாளர் குப்பன் ஆகியோரால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு பின்னர் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசாக புத்தகப் பைகளைவழங்கினர்.இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம் துரை,உதயன் ஆகியோர் கலந்து கொண்டனர்..