சேலம் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இணை ஒருங்கிணைப்பாளர் அந்தோணி தலைமை தாங்கி நடத்தினார். இதில் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி, இணை ஒருங்கிணைப்பாளர் சந்திரன் ,ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் ,போலி ஆவணங்கள் தயாரித்து பத்திர பதிவு செய்ததை ரத்து செய்ய வேண்டும், போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இது தொடர்பாக கொடுக்கப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் கோரிக்கைகள் ஐஸ் போல் கரைந்து போவதாக கூறி அனைவரும் ஐஸ் சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.