செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழக்குன்றம் நென்மேலி ஊராட்சியில் சைந்தவி அடுக்கு மாடி குடியிருப்பு ஜி12 பிளாக் 2ல் வசித்து சீட்டாபாபு என்பவர் திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து அரசு அலுவலர்களையும் எந்த வித முகாந்திரமும் இன்றி வாட்சப் குழு அமைத்து அவதூறான செய்திகளை பரப்பி வருகிறார் எனவும் ஆன்டிக் கரப்ஷன்  என்ற குழுவை   அவரே அமைத்து கொண்டு அனைத்து அரசு ஊழியர்களையும் அதில் இணைத்து கடுமையான பொய் புகார்களை பரப்பி மன  உளைச்சலுக்கு ஏற்படுத்தி வருகிறார். எனவும் திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் லஞ்சம்வாங்குவதாக தொடர்ந்து பொய்யான புகாரை எந்தவித ஆதாரமும் இன்றிவாட்சப் குழுவில் பரப்பி வருகிறார். லஞ்சம் வாங்கும் ஊழியர்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.50,000/- பரிசு எனவாட்சப் குழுவில் அவதூறு பரப்பி வருகிறார். அரசு ஊழியர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் வாட்சப்கால் மூலம் அழைத்துபணம் கேட்டு மிரட்டி வருகிறார்.அரசின் பிரதான திட்டமான பிரதம மந்திரி வீடு குடியிருப்பு திட்டம், கழிவறைதிட்டம், போன்ற திட்டங்களுக்கு பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வங்கி மூலம் நிதி விடுவிக்கப்படுகிறது. வீடுகளை கட்டாமல் ஊழியர்கள் பலகோடி ரூபாய் பணம் எடுத்து சென்றதாக எந்த ஆதாரமும் இன்றி பொய் புகார்களைபரப்பி வருகிறார்.ஊராட்சியில் கிராம சபா கூட்டத்தில் கலந்து கொண்டு யாரையும் கேள்வி கேட்க விடாமல் பல பொய் புகார்களை கூறி கிராம சபையில் தொடர்ந்து கிராம சபையின்நம்பக தன்மையை சீர்குலைத்து வருகிறார்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர், மற்றும் ஊராட்சி/ பிரதிநிதிகள் மீது ஆதாரம் இன்றி லஞ்சம் வாங்குவதாக அவதூறு பரப்பி வருகிறார்.போதிய ஊழியர்கள் கட்டமைப்பு இன்றி பல்வேறு அரசு திட்டங்களை பொது மக்களிடையே கொண்டு செல்லும் அரசு ஊழியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கடுமையான மன உலைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசிற்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் உள்நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்  எனவும் தொடர்ந்து இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் சீட்டாபாபு என்பவர் மீது உரிய விசாரணை மேற்கொண்டு சட்டப்படியான காவல் துறை நடவடிக்கை மேற்கொள்ள கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம் என்று ஊராட்சி மன்ற தலைவர்களின்  கூட்டமைப்பு திருக்கழுக்குன்றம் ஒன்றியம் செங்கல்பட்டு மாவட்டம், சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட   மாவட்ட ஆட்சியர் அவர்கள் இந்த மனுவை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.