திருத்தணியில் ஸ்ரீ கோவிந்தா அறக்கட்டளை மூலம் புரட்டாசி மாதம் திருப்பதி திருமலைக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி பத்தாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீ கோவிந்தா அறக்கட்டளை தலைவரும் முன்னாள் நகராட்சி துணைத் தலைவருமான டி. இரகுநாதன் ஏற்பாட்டில் தொடரும் இந்த நிகழ்ச்சியில். ஏராளமான ஆன்மீக சான்றோர்கள் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். திருக்கழுக்குன்றத்தில் இருந்து பாதயாத்திரையாக வந்த ஏழுமலையான் பக்தர்களுக்கு இங்குள்ள ராமாராவ் திருமண மண்டபத்தில் தங்க வைத்து முதலுதவி. மருத்துவ உதவி. உள்ளிட்ட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. திருப்பதி ஏழுமலையான். திருவுருவ படத்துக்கு சிறப்பு பூஜைகள் தீபாரதனைநடத்தி அனுதானத்தை தொடங்கி வைத்தனர். அனைவரும் ஏழுமலையானை வணங்கி அன்னதானத்தை உண்டு மகிழ்ந்து அங்கேயே தங்கி. மறுநாள் பாதயாத்திரையாக புறப்பட்டு திருப்பதி திருமலை சென்று அடைந்தனர். இந்த அன்னதான விழாவில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர்.எஸ். சந்திரன் ஆகியோர் உடல் ஆரோக்கியத்துடன் வாழவும்.மக்கள் அனைவரும் நோயின்றி வாழவும் கூட்டு பிரார்த்தனை நடத்தப்பட்டது. இதில் ஸ்ரீ கோவிந்தா அறக்கட்டளை உறுப்பினர் திலகவதி இரகுநாதன்.நகராட்சி கவுன்சிலர்கள் டி. எஸ்.. ஷியாம் சுந்தர்.கே. எஸ். அசோக்குமார். மற்றும் புகைப்படக் கலைஞர் ஆ. மதிவாணன் மத்தூர் பன்னீர்செல்வம்.எம். தீனதயாளன். எஸ். சந்திரசேகரன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.