ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,தா.பழூர் ஊராட்சி ஒன்றியம்,காரைக்குறிச்சி ஊராட்சியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் உத்தரவிற்கிணங்க,பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை மற்றும் அரியலூர் மாவட்டம் நிர்வாகம் சார்பில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாமினை, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் மா.தட்சிணாமூர்த்தி,ஊராட்சி மன்ற தலைவர் கவிதா விஜயகுமார்,தா.பழூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பா.சரளாதேவி,கிராம நிர்வாக அலுவலர் மணிமாறன்,தலைமை ஆசிரியர் S.கலியபெருமாள்,ஒன்றிய குழு உறுப்பினர் இரா.அண்ணாதுரை,மாவட்ட விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் என்.ஆர்.ராமதுரை,ஒன்றிய அவைத்தலைவர் எஸ்.சூசைராஜ்,பொருளாளர் த.நாகராஜன்,ஒன்றிய துணை செயலாளர் இந்துமதி நடராஜன், மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.ஆர்.தமிழ்ச்செல்வன், கோவி.சீனிவாசன்,மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் ந.கார்த்திகைகுமரன், வெ.பாலசுப்ரமணியன்,சம்பந்தம்,த.குணசீலன், ஆர்.கே.நளராசன்,எழிலரசி அர்ச்சுணன்,மருத்துவர் மா.சங்கர்,முனைவர் முருகானந்தம்,தங்கபிரகாசம் மற்றும் மருத்துவ அலுவலர்கள்,கர்ப்பிணி பெண்கள், சுகாதார பணியாளர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.