திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேடசந்தூர் மற்றும் வடமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காந்திராஜன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற இரண்டு ஒன்றியத்தை சேர்ந்த 200 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு பரிசு பொருட்களும் தன்னுடைய சொந்த செலவில் அனைவருக்கும் புடவை கொடுத்து வாழ்த்தினார்.இதன் தொடர்ச்சியாக வடமதுரை ஒன்றியம் சுக்காம்பட்டிஊராட்சியில் நீண்டகால பொதுமக்களின் கோரிக்கையான புதிதாக கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்துவமனையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்அதன் பின்பு வடமதுரை பேரூராட்சி பகுதியில் புதிதாக சுகாதார நிலையம் கட்டுவதற்கு பூமி பூஜைசட்டமன்ற உறுப்பினர் எஸ், காந்தி ராஜன் கலந்து கொண்டார்இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் சௌடேஸ்வரி கோவிந்தன், பேரூராட்சி தலைவர் மேகலா கார்த்திகேயன், வடமதுரை பேரூராட்சித் தலைவர் நிருபா ராணி கணேசன், எரியோடு பேரூராட்சி தலைவர் முத்துலட்சுமி கார்த்திகேயன், வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதா பார்த்திபன், திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், வடமதுரை ஒன்றிய செயலாளர் சுப்பையா, எரியோடு பேரூர் கழக செயலாளர் சின்னா என்ற செந்தில்குமார், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மருத பிள்ளை, அய்யலூர் பேரூராட்சி தலைவர் கருப்பன் மற்றும், கால்நடை துறை சார்ந்த அலுவலர்கள் மருத்துவர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள, மருத்துவர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் நிறைவில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நன்றி தெரிவித்தார்.