தென்காசி மாவட்டம் வினைதீர்த்தநாடார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கண் தானம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பாராட்டு விழா திப்பணம்பட்டி கிளை நூலகம், பாரதியார் வாசகர் வட்டம் சார்பாக  நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு நூலகர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகர் வரவேற்புரையாற்றினார்

இந்த நிகழ்ச்சியில், பாவூர்சத்திரம் கண்தான விழிப்புணர்வு குழு ,நிறுவனரும் அரிமா சங்க ஆலமரம் வட்டார தலைவருமான கே ஆர் பி இளங்கோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண் தானம் பற்றி மாணவர்களுடையே கலந்துரையாடினர். அனைவருக்கும் கண் தானம் பற்றிய விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

காலாண்டு தேர்வில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரென்டாம் வகுப்பு வரை முதல் மூன்று இடங்கள் பெற்ற மொத்தம் 48 மாணவ, மாணவிகளுக்கு இளங்கோ பரிசுகள் வழங்கினார். மேலும் இந்த பள்ளியில் பயிலும் மேல்நிலை வகுப்பு மாணவர்கள் சமீபத்தில் கல்வி சுற்றுலாவிற்கு ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி, கிருஷ்ணாபுரம் கோவிலில் கள ஆய்வு மேற்கொண்டு தங்கள் அனுபவங்களை கட்டுரைகளாக சமர்பித்திருந்தனர். அதில் சிறப்பாக எழுதியிருந்த முதல் மூன்று மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வட்டார அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவன் தருண் கோபிக்கும் பாரதியார் வாசகர் வட்டம் சார்பாக பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை வாசகர் வட்ட தலைவர் கே பி தங்கராஜ் தொகுத்து வழங்கினார். வேல்முருகன், ஆசிரிய, ஆசிரியர்கள் மற்றும் பயிற்சி ஆசிரியைகள்,மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். விழா முடிவில் ஆசிரியர் ஆறுமுக நயினார் நன்றி கூறினார்.