கோவை மாவட்டம் 129 வருடங்களாக இந்தியாவில் நறுமணம் மிக்க சுத்தமான கூட்டுப் பெருங்காயத்தை தயாரித்து வழங்கி வரும் லால்ஜி கோதோ நிறுவனம் தனது புதிய மசாலா பொருட்களை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் கூட்டஅரங்கில் அறிமுகம் செய்துள்ளது. அதனை தொடர்ந்து எல்.ஜி பெருங்காயம் நிறுவனத்தின் ஆறாவது தலைமுறையைச் சார்ந்த பங்குதாரர் ரித்தி மெர்ச்சண்ட் மற்றும் எல் ஜி நிறுவனத்தின் மற்றொரு பங்குதாரரான ஹீனா மெர்செண்ட் கூறுகையில் எல்ஜி நிறுவனத்தின்அடையாளம் மற்றும் நீடித்து நிலையாக நிற்பதற்கான காரணம் அதன் தயாரிப்புக்களின் தரத்தை,தங்கள் நிறுவனத்தின் வேராக பார்க்கிறது,பாரம்பரியமான, தரமான தயாரிப்பை தொடர்ந்து கடைபிடிப்பது மட்டுமே ஒரே குறிக்கோள் நுகர்வோர்களின் விருப்பம் மற்றும் தேவை அறிந்து அதற்கேற்ற வகையில் மசாலா பொருட்களை தயாரிக்கிறோம் எல்ஜி நிறுவனம் தற்போது புதிதாக ஐந்து நேரடி மசாலா தூள் வகைகளையும் ஆறு விதமான மசாலா கலப்பு பொடி வகைகளாக மல்லி தூள்
மஞ்சள் தூள்,மிளகாய் தூள் சீரகத்தூள்,மற்றும் காஷ்மீரி மிளகாய் தூள் மசாலா பொடி வகைகள் பிரியாணி மசாலா,சிக்கன் மசாலா,
மட்டன் மசாலா,ரசப்பொடி
சாம்பார் பொடி மற்றும் கரம் மசாலா பொடி,போன்ற தரமான மசாலா தூள் வகைகளை மக்களின் பயன்பாட்டிற்க்காக அறிமுகம் செய்துள்ளோம் மேலும் எல்ஜி பெருங்காய நிறுவனம் பல நூற்றாண்டுகளை கடந்து இன்று வரை நிலைத்து நிற்பதற்கு வாடிக்கையாளர்களின் பேராதரவு தான் காரணம் என்று தெரிவித்தனர்