வேலூர் மாவட்டம் , வேலூர் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ் நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பாக வேலூர் கிளை  அகில இந்திய வேலைநிறுத்த கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் வேலூர் கிளை மாவட்ட தலைவர்  கெஜராஜ் தலைமையில் நடைபெற்றது.அருள் செயலாளர்  வேலூர் கிளை துவக்க உரையாற்றினார்.ஜனார்த்தனன் மாநிலகுழு உறுப்பினர் விளக்க உரையாற்றினார்.சத்தியநாராயணன் மாநில தலைவர்  சிறப்புரையாற்றினார் .தாமோதரன் வேலூர் செயற்குழு உறுப்பினர்  நன்றியுரையாற்றினார் இதில் 8 அம்ச வேலைநிறுத்த கோரிக்கைகள்1976 -எஸ்பிஇ சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும் .மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்கான நிரந்தர வேலை விதிகள் வகுக்க கோரியும்  மருந்து விற்பனை பிரதிநிதிகளை விற்பனை இலக்கை காரணம் காட்டி பழிவாங்காதேமருத்துவ பிரதிநிதிகளை எலக்ட்ரானிக் சாதனம் மூலம் கண்காணிப்பதை தவிர்த்திடு தகவல் பரிமாற்றம் தொடர்பான தனிநபர்  இரகசியங்களை பாதுகாத்திட வேண்டும்.மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க கோரியும்.அனைத்து அரசு  மருத்துவமனைகளிலும் மருத்துவ பிரதிநிதிகள் தடையின்றி வேலை செய்ய வழிவகை செய்ய கோரியும்.

மருத்துவ பிரதிநிதிகள் அவர் சார்ந்த பணியிடங்களுக்கு தடையின்றி நுழைவதை உறுதி செய்யய  வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.