சேலம் நவராத்திரி விழாவினை முன்னிட்டு இரண்டு உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது .நெகிழியை மறுசுழற்சி முறையில் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 50க்கும் மேற்பட்டோர் கொலுவில் வைக்கும் பொம்மைகள் தயாரித்து உலக சாதனை புரிந்தனர் .பிளாஸ்டிக் பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்கள், நெகிழிப்பைகள், தேங்காய் நார், களிமண் பொம்மைகள் ,அட்டைப்பெட்டிகள் என பயன்படுத்தி தசாவதாரம், அஷ்டலட்சுமி சிலைகள், சீன பொம்மைகள், மரபாட்சி பொம்மைகள் ,அலங்கார பொருட்கள் என தயாரித்துக் குழுவாக அமைத்தனர். இரண்டாவது நிகழ்வாக நவராத்திரி விழாவை வரவிருக்கும் விதமாக 7 மாணவிகள் வயலின் தீலிப்பன் அவர்களுடன் கர்நாடக கீர்த்தனைகளை இடைவிடாது மூன்று மணி நேரம் வாசித்து உலக சாதனை புரிந்தனர். இந்த நிகழ்வு நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்ததை புத்தகத்தின் இயக்குனர் ஹேமலதா அறிவித்தார் இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சங்கர் தி சென்னை சில்க்ஸ் மேலாளர் பிரியா டாம் ஜெர்ரி மண்டசரி பள்ளி நிறுவனர் பங்கேற்று உலக சாதனை சான்றிதழ் பதகங்களை வழங்கினார் இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை நோபல் உலக சாதனை குழுவினர் தி சென்னை சில்க்ஸ் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர் .