தென்காசி அக் ; 19-

தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம், இராயகிரி பாகம் 2 கிராமம், மஜரா உள்ளார். 141-3, 52 தென்காசி மெயின் ரோடு என்ற முகவரியில் வெள்ளத்துரை என்பவர் மகன் சண்முகத்துரை வசித்து வந்துள்ளார் சண்முகத்துரை உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் 16.10.2023 அன்று சிகிச்சைக்காக திருநெல்வேலி மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுசிகிச்சையின்போது மூளைச்சாவுஅடைந்து விட்டதன் காரணத்தினால் அவரது இருதயம், நுரையீரல், கல்லீரல்,சிறுநீரகம் மற்றும் கண்கள் ஆகியவற்றை அவரது குடும்பத்தினர் உறுப்பு தானம் செய்துள்ளனர். மேற்படி மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட சண்முகத்துரை உடல் 17.10.2023 அன்று சொந்த ஊரான உள்ளார் கிராமத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது  தமிழ்நாடு அரசு சார்பில் சங்கரன்கோவில், கோட்டாட்சித் தலைவர் மலர் வளையம் வைத்து  வைத்து அஞ்சலி செலுத்தினார்.