கோவை மாவட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக IFHRMS திட்டத்தை கைவிட கோரியும்மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் கட்டணமில்லா சிகிச்சை உறுதிப்படுத்திடவும் தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம்  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள கருவூலகத்தின்  முன்பு  தலைவர் தோழர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது .இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் தோழர்செந்தில்குமார் கோரிக்கை உரையாற்றினார் இந்த மாபெரும்ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் துறை வாரிய சங்கங்களின் மாநில, மாவட்ட,வட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் திரளாக பங்கேற்று கோஷங்கள் முழங்க தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர் மேலும்இந்த ஆர்பாட்டத்தில்  நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம் மாநில துணைத்தலைவர் தோழர்செந்தில்நாதன்,மாவட்ட இணைச் செயலாளர்  தோழர் பாலகிருஷ்ணன் TNGPA,மாவட்ட இணை செயலாளர் தோழர் ரமேஷ் TNROA, மகளிர் துணைக் குழு உறுப்பினர் தோழர் வளர்மதி,மாவட்ட செயலாளர் நெடுஞ்சாலை துறை ஊழியர் சங்கம் தோழர் மாலதிராணி,மாவட்ட துணைத் தலைவர் தோழர் மோகன் TNITOA, மாவட்டசெயலாளர்பொதுப்பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சி துறை பணியாளர் சங்கம் தோழர் சதிஷ் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர் இப்போராட்டத்தின் முடிவில் மாவட்டப்பொருளாளர் தோழர் நடராஜன் நன்றியுரை வழங்கினார்.