வேலூர் மாவட்டம் ,வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேலூர் மாநகர் மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் ஷப்பீர்கான் தலைமையில் நடைபெற்றது .துணைத் தலைவர் நூர் முஹமது வரவேற்பு உரையாற்றினார். மாநில அமைப்புச் செயலாளர் அப்துல் பாசித் ,ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தும் பயங்கரவாதத்தை ஐ.நா. சபை அமைதி வழியில் தீர்வு காண வேண்டும் என்பதை  வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர் .ஆர்ப்பாட்டத்தில் முகமது ஹனீப் .  மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் கே எச்.  அப்துல் ரஹீம், மாநில அமைப்பு செயலாளர் எச். அப்துல் பாசீத் சாஹேப், மாவட்டச் செயலாளர் அப்துல் பாஷா, வேலூர் மாநகரச் செயலாளர் பி.ஜே.ஷகில் அஹமத் ,நூர் சுஹேல் உள்ளிட்ட  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.