இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் மு.சுந்தரபாண்டியனை அனைத்துலக எம்.ஜிஆர் மன்ற துணை செயலாளராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். இவர் ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவராகவும். ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்ட அ.தி.மு.க .தொண்டர்கள் மாநில நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ள சுந்தரபாண்டியனை சந்தித்து வாழ்த்தினார்கள்.