திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நகராட்சியில் கொடுமுடி காவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.அது சமயம் வெள்ளக்கோயில் திருச்சி கோவை நெடுஞ்சாலையில் குடிநீர் விநியோக பிரதான குழாய் செல்கிறது இந்த சாலையில் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் பிரதான குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வந்தது.அடிக்கடி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படுவதை தடுக்கும் விதமாக சாலையின் ஓரப்பகுதிக்கு மாற்றி அமைக்க பட்டது. அதன் பின்னரும் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரியத்திற்கு நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தவறுகள் தெரிவிக்கப்பட்டும் பணி மேற்கொள்ள கால தாமதம் ஏற்பட்டதால் நகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகம் தட்டுபாடு ஏற்படும் நிலை உருவாகும் எனவே நகராட்சி மன்ற தலைவர் மு.கனியரசி மற்றும் ஆணையாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிரிஸ்துராஜ் அவர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த உடனேயே பணிகளை துரிதப்படுத்த குடிநீர் வடிகால் வாரியத்திற்கு உத்தரவு பிறப்பித்தார்.. அதனடிப்படையில் குழாய் உடைப்பு பணிகள் உடனே சரிசெய்யபட்டு மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது. சூழ்நிலையை உணர்ந்து தகவலறிந்தவுடன் துரிதமாக செயல்பட்ட திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிரிஸ்துராஜ் அவர்களுக்கு வெள்ளகோவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பாக தங்களது நன்றிகளையும் பாராட்டாக்களையும் தெரிவித்தனர்…..