தென்னிந்தியாவில் கட்டுமானதொழிலில் முன்னணியில் உள்ள ஒலிம்பியா குழுமம் மற்றும் மெர்லின் குழுமம், இந்திய விமான நிலைய ஆணையத்துடன் இணைந்து சென்னை விமான நிலையத்தில் ஏரோஹப் எனப்படும் புதிய வணிக வளாகத்தைத் தொடங்கியுள்ளது. ஒலிம்பியா குழுமத்தின் ஏ ஜே பாலாஜி – CEO முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா தொடங்கி வைத்தார்.புதிய ஏரோஹப் வணிக வளாகம் என்பது நாடு முழுவதும் இருந்து வரும் விமானப் பயணிகள் வந்து செல்லும் இடமாகத் திகழும். இந்த புதிய வணிக வளாகத்தின் வடிவமைப்பு மற்றும் உள்புறம் புகழ்பெற்ற ஆர்.எஸ்.பி. இந்தியா (வடிவமைப்பு ஆலோசகர்கள்) கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டு ஈர்க்கப்பட்டுள்ளது.புதிய வணிக வளாகம் சுமார் 2.5 லட்சம் சதுர அடி பரப்பளவைக் கொண்டது. இரண்டு உணவு கூடங்கள், 100-க்கும் மேற்பட்ட பிராண்ட் சில்லறை விற்பனை நிலையங்கள், 5-க்கும் மேற்பட்ட மல்டிபிளக்ஸ் திரையரங்கு வசதி மற்றும் 2500-க்கும் மேற்பட்ட கார்கள், டூ வீலர்களை நிறுத்த முடியும். இந்த வசதிகள் அனைத்தும் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் மல்டிலெவல் கார் நிறுத்தம் என விமான நிலையத்தின் ஒருங்கிணைந்த பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.ஏரோஹப் வணிக வளாக தொடக்க விழாவில் செய்தி தொடர்பாளர் பேசுகையில், சென்னை விமான நிலையம் என்பது 6-7 மண்டல பகுதிகளை இணைக்கும் விமான நிறுத்தும் இடமாகக் கருதுகிறோம். இங்கு வருபவர்களுக்கு சமூகத் தொடர்பை தூண்டும் வகையில் இங்கு உயர்தர பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு உரிய இடம் அளிக்கிறோம். நாட்டிலேயே முதன்முறையாக விமான பயணிகள் வந்து செல்லும் ஒரு இடமாக வணிக வளாகத்தை வாழ்க்கை முறை இடமாக உருவாக்கும் யோசனையுடன் முன்னெடுத்துள்ளோம். 24 மணி நேரமும் திறந்திருக்கும் உணவகம், சர்வதேச மற்றும் உள்ளூர் உணவு வகைகள் ஆகியவை விமான பயணிகளுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும் என்றார்.