அரியலூரில் மாவட்ட அதிமுக பூத்கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் அக்கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ். ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆசைமணி கலந்துகொண்டு பேசுகையில் தற்பொழுது பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறியதால் வரும் மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு தோல்வி பயம் வந்துள்ளது சிறுபான்மையினர் அ.தி..மு.க. ஆதரவு அளிக்க தயாராக உள்ளனர் அரசியல் களம் என்பது எந்த நேரத்திலும் வேண்டுமானாலும் மாறும் ஆனால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்காக தி.மு.க. கூட்டணியில் இருந்து பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இந்த கூட்டணி வேலையை பொதுச் செயலாளர் பழனிச்சாமி பார்த்துக் கொள்வார் எனவே மக்களவைத் தேர்தலில் கட்சியின் அனைத்து அணியினரும் ஒன்றாக இருந்து செயலாற்றி 40 தொகுதிகளையும் வெற்றி பெற பாடுபட வேண்டும் என்றார்..