ராமநாதபுரம்  மாவட்டம், மண்டபம் வட்டாரம் அழகன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக அயோடின் பற்றாக்குறை ஒழிப்பு தின விழா நடந்தது.

உணவு பாதுகாப்பு துறை ,ஆணையர்   ஆணைக்கிணங்க ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன்  அறிவுறுத்தல் படி, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயகுமார்  வழிகாட்டல் படி  அழகன்குளம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ராமநாதபுரம் நகராட்சி, மண்டபம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்கவேல் ஏற்பாட்டில் பிறப்பு,  இறப்பு வரை நம் அன்றாட வாழ்வில் தேவைப்படும்  அயோடின் பற்றாக்குறை   ஒழிப்பு தின விழா விழிப்புணர்வு நடந்தது.  

 அயோடின் என்பது நம் உடலுக்கு தேவையான முக்கியமான  ஒன்றாகும். இந்த அயோடின் நமது  உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாததாகும் . இந்த அயோடின் அளவானது வயதுக்கேற்றவாறு 9 – 13 வயது குழந்தைகளுக்கு 120 மில்லி கிராம், 14-18 பருவ, நடுத்தர வயதினருக்கு 150 மில்லி கிராம், கர்ப்பிணிகளுக்கு 220 மில்லி கிராம்) பயன்படுகிறது . உலக கழுத்து கழலை ஒழிப்பு தினம் என்ற நிகழ்வானது 1992 அக்21 முதல் “உலக அயோடின் பற்றாக்குறை ஒழிப்பு தினமாக” கொண்டாடப்பட்டு வருகிறது. அயோடின் உப்பானது நம் உடலில் உள்ள தைராய்டு ஹார்மோன் , ஹார்மோனை சுரப்பதற்கு மிகவும் இன்றியமையாதாக கருதப்படுகிறது .நமது நாட்டில் உள்ள 28 மாநிலங்களில் 361 மாவட்டங்களில் அயோடின் பயன்பாடு  புள்ளிகள் விவரப்படி 256 மாவட்டங்கள் மட்டுமே அயோடின்  முழுமையாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும்  மீதமுள்ள பகுதிகளில் அயோடின் பற்றாக்குறை இருப்பதாக தெரியப்படுகிறது. அயோடின் குறைபாடு காரணமாக குறைமாத பிரசவம், குழந்தையின் மூளை வளர்ச்சியின்மை, மனப்பாடம் செய்யும் திறன் குறைவு, முன் கழுத்து கழலை நோய் கருச்சிதைவு போன்ற நோய்கள் உருவாக காரணமாக இருக்கின்றது.ஆகவே பிறப்பு முதல் இறப்பு வரை நம் உடலுக்கு தேவையான ஐயோடினை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அழகன்குளம் மேல்நிலைப் பள்ளியில் இந்த உலக அயோடின் பற்றாக்குறை ஒழிப்பு தினம் தொடர்பாக மாணவ மாணவிகள் ஆசிரியர்களுக்கு இந்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது .  தலைமை ஆசிரியர் உதவி, தலைமை ஆசிரியர், சாரண சாரணிய இயக்க ஒருங்கிணைப்பாளர், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் மாணவ மாணவிகள் உட்பட சுமார் 212 பேர் இந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.